ஆக. 9-இல் பழச்செடிகளில் நாற்றங்கால் மேலாண்மை குறித்த இலவச பயிற்சி
எலுமிச்சை, நாவல் சாகுபடித் தொழில்நுட்பங்கள் மற்றும் பழச்செடிகளில் நாற்றங்கால் மேலாண்மை குறித்த இலவசப் பயிற்சி முகாம் நாமக்கல்லில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
எலுமிச்சை, நாவல் சாகுபடித் தொழில்நுட்பங்கள் மற்றும் பழச்செடிகளில் நாற்றங்கால் மேலாண்மை குறித்த இலவசப் பயிற்சி முகாம் நாமக்கல்லில் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என். அகிலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 9-ஆம் தேதி காலை 9 மணிக்கு எலுமிச்சை, நாவல் சாகுபடித் தொழில்நுட்பங்கள் மற்றும் பழச்செடிகளில் நாற்றங்கால் மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பழச்செடிகளில் நாற்றங்கால் மேலாண்மையில் புதிய ரகங்கள், பருவம், விதை அளவு, விதை நேர்த்தி, செடி இடைவெளி, உர மேலாண்மை, நுண்ணூட்ட மேலாண்மை, சொட்டு நீர் பாசன முறையில் நீர் வழி உரமிடல், வடிவமைப்பு முறைகள், களை நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் நிர்வாக முறைகள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் விரிவாகக் கற்றுத்தரப்படும். இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 8-ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணைக் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.