FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாளை நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை(செப்.7) நடைபெறுகிறது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை(செப்.7) நடைபெறுகிறது.
 இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் மாதம்தோறும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம்.
 இம் முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், விற்பனைப் பிரதிநிதி, மேற்பார்வையாளர், மேலாளர், கணினி இயக்குபவர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் தேவைப்படுகின்றனர். மேலும், அனைத்துவித கல்வித் தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் வரும் 7ஆம் தேதி காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments