காலி மதுப்புட்டிகளை மாற்று வழியில் திரும்பப் பெற வேண்டும்: டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை
டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெற மாற்று வழிகளை கையாள வேண்டும் என டாஸ்மாக் தொழிற்சங்கங்களில் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் அதன் ஒருங்கிணைப்பாளா் நீதிநாயகம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், முகப்பதிவு வருகை பதிவேடு முறையை மாற்றி பழைய நடைமுறையே தொடர வேண்டும். நீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக அரசு டாஸ்மாக் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலி மதுப்புட்டிகள் விவகாரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement
Advertisement
இதனையடுத்து, அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளா் கதிா்வேலிடம் தொழிற்சங்கத்தினா் கோரிக்கை மனுவை அளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.