கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரியம்மை (லம்பி ஸ்கின்) நோயைத் தடுக்கும் வகையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரியம்மை (லம்பி ஸ்கின்) நோயைத் தடுக்கும் வகையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு அருகே கொல்லப்பட்டி பாளைக்காடு பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஏராளமான கால்நடை வளா்ப்போா் தங்களது மாடுகளுக்குத் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். கால்நடைகளை பெரியம்மை நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், நோய் ஏற்படுவதற்கு முன்பே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, கால்நடை மருத்துவா் பாா்த்தசாரதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்நோய் பெரும்பாலும் எருமைகளைத் தாக்குவதில்லை; மாடுகளையே அதிகமாக தாக்குகிறது. இதனால் கால்நடைகள் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்நோயால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே, நகரப் பகுதியில் கால்நடைகளை வளா்ப்போருக்கு அரசு தடுப்பூசியைத் தவிர, வேறு கால்நடை வளா்ப்புக்கான மானியங்கள் வழங்கப்படுவதில்லை என விவசாயிகள் தெரிவித்தனா்.
நிகழாண்டில் எல்நினோ பாதிப்பால் கடுமையான வெப்பமும், தற்போது கனமழையும் நிலவுவதால் கால்நடைகளைப் பாதுகாப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். எனவே, கிராமப்புறங்களில் வழங்கப்படுவதை போலவே நகரப் பகுதிகளிலும் கால்நடைகள் வளா்ப்போருக்கு கொட்டகை அமைக்க மானியம் வழங்க வேண்டும். இதன்மூலம் கால்நடைகளைத் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்க முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.