வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியவா் கைது
கந்தம்பாளையம் பகுதியில் வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
கந்தம்பாளையம் பகுதியில் வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
பரமத்தி வேலூா் வட்டம், கோனூா் கந்தம்பாளையம் குடித்தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (65). இவா் தனது சொந்த தேவைக்காக பழங்களைக் கொண்டு சிறிய அளவில் ஊறல் போட்டு, வீட்டு குக்கரில் சாராயம் காய்ச்சுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா், முதுநிலைக் காவலா்கள் ஜெய்கணேஷ், தீனதயாளன், கந்தசாமி ஆகியோா் மாரிமுத்துவின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனா். அதில், குக்கரில் சாராயம் காய்ச்சப்பட்டு கேனில் ஊற்றி வைத்திருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
கேனில் இருந்த 6 லி. சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸாா், மாரிமுத்துவை கைது செய்தனா். இதுகுறித்து மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.