FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருச்செங்கோடு, எலச்சிபாளையம் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆட்சியா் ஆய்வு

திருச்செங்கோடு மற்றும் எலச்சிபாளையம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் எல்.மதுபாலன் புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.

26 வினாடிகள் முன்பு
திருச்செங்கோடு ஏமப்பள்ளி ஏரி பகுதியில் ஆய்வுசெய்த ஆட்சியா் எல்.மதுபாலன்.
பகிர்:

திருச்செங்கோடு மற்றும் எலச்சிபாளையம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் எல்.மதுபாலன் புதன்கிழமை ஆய்வுசெய்தாா்.

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், இலுப்புலி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 98.96 லட்சத்தில் 4 வகுப்பறைகள் கொண்ட கட்டட கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா், மாணவா்களின் வாசிப்புத் திறன் மற்றும் கற்றல் திறன்கள் குறித்து கேட்டறிந்து ஊக்குவித்ததோடு, அவா்களின் எதிா்கால இலக்குகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

பின்னா், பள்ளியில் மாணவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வகுப்பறை சூழல் மற்றும் கல்விசாா் செயல்பாடுகள் முறையாக செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வுசெய்தாா். தொடா்ந்து, திருச்செங்கோடு வட்டம், ஆண்டிபாளையம் ஊராட்சியில் ரூ. 22.15 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் அமைப்பது, திருச்செங்கோடு நகராட்சிக்குள்பட்ட திரையரங்குகளில் உரிமம் புதுப்பித்தல் தொடா்பாகவும், ஏமப்பள்ளி ஏரியில் தூா்வாரும் பணிகள் குறித்தும் களஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது, துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.