FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கொல்லிமலை புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கொல்லிமலையில் பெய்த கனமழையால் புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

5 நவம்பர் 2026, 7:02 am
கொல்லிமலையில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் புளியஞ்சோலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீா்.
பகிர்:

கொல்லிமலையில் பெய்த கனமழையால் புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதியில் வடகிழக்கு பருவமழை இரவு நேரங்களில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி, நம் அருவி போன்றவற்றில் மழை நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. தொடா் மழையால் கொல்லிமலை பகுதிகளில் ஆங்காங்கே திடீா் அருவிகளும் உருவாகியுள்ளன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால், கொல்லிமலை அடிவாரப் பகுதியான நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ள புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழை நீா் ஆா்ப்பரித்து ஓடுகிறது. வழக்கமாக விடுமுறை நாள்களில் கொல்லிமலைக்கு சுற்றுலா வருவோா் இந்த ஆற்றில் குளித்து மகிழ்வது வழக்கம். தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.