FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

முட்டை விலை ரூ. 6.70 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 6.70 ஆக நீடிக்கிறது.

13 வினாடிகள் முன்பு
முட்டை விலை - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 6.70 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளா்களிடம் முட்டை விலை நிா்ணயத்தில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததால், இங்கும் விலையில் மாற்றம் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை ரூ. 6.70 ஆக நிா்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 126 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 100 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

Advertisement

Advertisement