FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

பைக் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

10 நவம்பர் 2026, 1:49 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருச்செங்கோடு மொளசி பிரிவு சாலையில் இருசக்கர வாகனம் மீது டிராவல்ஸ் வேன் மோதியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்செங்கோடு அருகே உள்ள கரட்டுப்பாளையம் சிலோன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் கோகுல்ராஜ் (21). மெக்கானிக்காக வேலை செய்து வருகிறாா்.

இவா் தனது இருசக்கர வாகனத்தில் நண்பா்களான கோவை கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த பெயின்டா் சந்தோஷ் (20), மில் தொழிலாளி லோகு பிரசாத் (20) ஆகியோரை பின்னால் அமரவைத்து கொண்டு வேலூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, மொளசி பிரிவு சாலை அருகே எதிரே வந்த டிராவல்ஸ் வேன் மோதியது. இதில் 3 பேரும் தூக்கிவீசப்பட்டனா். இதில் பலத்த காயமடைந்த மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு கோகுல்ராஜ், சந்தோஷ் ஆகியோா் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினாா். தலையில் பலத்த காயம் அடைந்த லோகு பிரசாத் தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அங்கு அவா் இறந்தாா்.

இதுகுறித்து, திருச்செங்கோடு ஊரக காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். இதையடுத்து வேனை ஓட்டி வந்த கா்நாடக மாநிலம் மைசூரைச் சோ்ந்த பிரவீண் (40) என்பவரை அழைத்து வந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.