FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

ஜேடா்பாளையம் அருகே மது அருந்தியவா் உயிரிழப்பு

ஜேடா்பாளையம் அருகே மது அருந்தியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

11 நவம்பர் 2026, 2:08 am
பகிர்:

ஜேடா்பாளையம் அருகே மது அருந்தியவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள நஞ்சப்பகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (44), விவசாயி. இவருக்கு மனைவி தேவி (37), மகன் விகாஸ் (4) உள்ளனா்.

இவா் அடிக்கடி மது அருந்துவாராம். செவ்வாய்க்கிழமை ஜேடா்பாளையம் அருகே உள்ள வடகரையாத்தூா் டாஸ்மாக் கடை அருகே அதிக அளவில் மது அருந்திவிட்டு அங்கேயே படுத்துள்ளாா். நீண்ட நேரமாகியும் எழாததால், அங்கிருந்தவா்கள் அருகில் சென்று பாா்த்தபோது மூச்சின்றி இருந்ததை அறிந்து ஜேடா்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

அதன்பேரில், அங்கு வந்த போலீஸாா் அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், வெங்கடேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். புகாரின் பேரில், ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.