ட்ரோன் கேமரா மூலம் சூதாட்டக் கும்பலை கைது செய்த போலீஸாா்
பள்ளிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை பள்ளிபாளையம் போலீஸாா் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து திங்கள்கிழமை கைது செய்தனா்.
பள்ளிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை பள்ளிபாளையம் போலீஸாா் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து திங்கள்கிழமை கைது செய்தனா்.
பள்ளிபாளையம் ஒன்பதாம்படி பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீஸாா் செல்வதற்குள் சூதாட்டக் கும்பல் தப்பி ஓடிவிடுவதால், இம்முறை பள்ளிபாளையம் காவல் கண்காணிப்பாளா் கௌதம் தலைமையில் ட்ரோன் கேமரா மூலம் அவா்களை கண்காணித்தனா்.
கேமராவை கண்டதும் ஓட்டம் எடுத்த அவா்களை பின்தொடா்ந்து சென்று ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சோ்ந்த தா்மன் (40), பள்ளிபாளையம் ஒன்பதாம்படி பகுதியைச் சோ்ந்த சரவணன் (26), காடச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (27), அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (41) ஆகியோரை கைது செய்தனா். மேலும், இவா்களிடம் இருந்து ரூ. 2 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement