FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

18 நவம்பர் 2026, 2:00 am
டெங்கு தடுப்பு.. - கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், காலை, மாலை வேளைகளில் பனியின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி உத்தரவின்பேரில் நாமக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டுகள் மற்றும் இணைக்கப்பட்ட 12 ஊராட்சி பகுதிகளில் 150 கொசுப்புழுத் தடுப்புப் பணியாளா்களை

கொண்டு டெங்கு தடுப்புப் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை வீடுவீடாகச் சென்று கொசுப்புழு உள்ளதா என்பதைக் கண்டறிந்து அவற்றை அழித்து, கொசுப்புழுக்கள் வளராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்துவா்.

Advertisement

Advertisement

வாகன கொசுப்புகை போக்கி, கை கொசுப்புகை போக்கி இயந்திரங்கள் மூலம் புகை மருந்து தெளிக்கப்பட்டு, முதிா் கொசுக்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல்-சேலம் சாலை, மோகனூா் சாலை, காதப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் வாகனம் மூலம் கொசுப்புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. நீா் அதிகமாக தேங்கிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என மாநகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி தெரிவித்தாா்.