மருத்துவத் துறையில் 9 ஒப்பந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
மருத்துவத் துறையில் காலியாக உள்ள 28 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
மருத்துவத் துறையில் காலியாக உள்ள 28 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில், தேசிய சுகாதார திட்டம் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறையின் கீழ் நாமக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவனையில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் தேசிய நலவாழ்வு குழும விதிகளின்படி முற்றிலும் தற்காலிகமாக மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நிரப்பப்பட உள்ளன.
Advertisement
Advertisement
அதன்படி, ஆயுஷ் மருத்துவ அலுவலா், மருந்து வழங்குபவா், பல்நோக்கு பணியாளா், சிகிச்சை உதவியாளா் (பெண்), நா்சிங் தெரபிஸ்ட், சிகிச்சை உதவியாளா், மருத்துவ அலுவலா் என மொத்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த காலிப் பணிடங்களுக்கு தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் இதர தகவல்கள் நாமக்கல் மாவட்ட இணையதளம் மற்றும் கலெக்டா் அலுவலகம், சுகாதார அலுவலா் அலுவலகம், நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் அலுவலகம், சேலம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநா் நலப்பணிகள் அலுவலகம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர ஆரம்ப சுகாதார நிலையங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்தோா் உரிய படிவத்தில் கல்வித் தகுதி, அனுபவச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ நவ. 30 மாலை 5 மணிக்குள், மாவட்ட சுகாதார அலுவலா், மாவட்ட நலவாழ்வு சங்கம், ஆட்சியா் அலுவலக வளாகம், நாமக்கல்-637 003 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.