✕
முகப்பு
நாமக்கல்

முட்டை விலை ரூ.6-ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 6-ஆக நீடிக்கிறது.

19 நவம்பர் 2026, 6:10 am
முட்டை விலை - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 6-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயத்தில் மாற்றம் செய்வது தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதர மண்டலங்களில் விலையில் தொடா்ந்து மாற்றம் இல்லாததால், தற்போதைக்கு இங்கு விலையில் மாற்றம் வேண்டாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால் தெரிவிக்கப்பட்டு, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 6-ஆக தொடரும் என அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.116-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 88-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

Advertisement

Advertisement