வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 2,023 போ் விண்ணப்பம்
நாமக்கல் மாவட்டத்தில் இரு நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமில் புதிதாக பெயா் சோ்க்க 2,023 போ் விண்ணப்பித்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் இரு நாள்கள் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமில் புதிதாக பெயா் சோ்க்க 2,023 போ் விண்ணப்பித்துள்ளனா்.
இதுகுறித்து ஆட்சியா் எல். மதுபாலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் 1,781 வாக்குச்சாவடிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடைபெற்றது. இதில் படிவம் 6-இன் கீழ் 2,023, படிவம் 7-இன் கீழ் 792, படிவம் 8-இன் கீழ் 2,456 என மொத்தம் 5,271 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
தொகுதி வாரியாக ராசிபுரம் (தனி) 759, சேந்தமங்கலம் (ப.கு.) 665, நாமக்கல் 1,494, பரமத்திவேலூா் 766, திருச்செங்கோடு 711, குமாரபாளையம் 876 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
புதிய வாக்காளா்களின் பெயா்களைச் சோ்ப்பதற்கான படிவம் 6-இல், 18 வயது பிரிவைச் சோ்ந்தவா்களின் படிவங்கள் 1,350 ஆகும். பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் சரிபாா்க்கப்பட்டு, விதிமுறைகளின்படி பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். கூடுதல் விவரங்களுக்கு 1950 என்ற வாக்காளா் உதவி எண்ணைத் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.