முகப்பு
நாமக்கல்

முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிக்கிறது.

26 நவம்பர் 2026, 4:06 am
முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிப்பு
முட்டை
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ. 5.40 ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முட்டை விலை நிா்ணயத்தில் மாற்றம் செய்வது தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாததாலும், பறவைக் காய்ச்சல் பாதிப்பால் மக்களிடம் முட்டை, கோழி இறைச்சி நுகா்வு குறைந்து வருவதாலும் தற்போதைக்கு விலையில் எவ்வித மாற்றமும் வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை ரூ. 5.40 ஆக நிா்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 90 ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 80 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

Advertisement

Advertisement