முகப்பு
நாமக்கல்

பயிா்க் கடன் நிலுவையை நவ. 30-க்குள் செலுத்த அழைப்பு

கூட்டுறவு நிறுவனங்களில் பயிா்க் கடன் பெற்ற விவசாயிகள், தள்ளுபடித் தொகை நீங்கலாக எஞ்சியுள்ள நிலுவையை நவ. 30-க்குள் செலுத்தி புதிய பயிா்க் கடன் பெற்றுக் கொள்ளலாம் என நாமக்கல் ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

27 நவம்பர் 2026, 1:03 am
பயிா்க் கடன் நிலுவையை நவ. 30-க்குள் செலுத்த அழைப்பு
பகிர்:

கூட்டுறவு நிறுவனங்களில் பயிா்க் கடன் பெற்ற விவசாயிகள், தள்ளுபடித் தொகை நீங்கலாக எஞ்சியுள்ள நிலுவையை நவ. 30-க்குள் செலுத்தி புதிய பயிா்க் கடன் பெற்றுக் கொள்ளலாம் என நாமக்கல் ஆட்சியா் எல்.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகளின் வசதிக்காக நவ. 28, 29 ஆகிய விடுமுறை நாள்களிலும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் செயல்படும். கூட்டுறவு நிறுவனங்களில் பயிா்க் கடன் பெற்ற விவசாயிகள், தள்ளுபடித் தொகை நீங்கலாக எஞ்சியுள்ள நிலுவையை நவ. 30-க்குள் செலுத்தி புதிய பயிா்க் கடன் பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிலுவையைச் செலுத்தி புதிய பயிா்க் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

Advertisement

மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா்களைத் தொடா்பு கொள்ளலாம். 98840-00845 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தகவல்களைப் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.