FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

456 கிலோ குட்கா பறிமுதல்; ஓட்டுநா் கைது

நாமக்கல்லில் லாரியில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ குட்கா மற்றும் லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநரையும் கைது செய்தனா்.

8 October 2026, 12:43 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல்லில் லாரியில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ குட்கா மற்றும் லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்ததுடன், அதன் ஓட்டுநரையும் கைது செய்தனா்.

பெங்களூரு ஜிகினி பகுதியில் இருந்து நாகா்கோவில் நோக்கி கன்டெய்னா் லாரி சென்று கொண்டிருந்தது. இனிப்பு வகை பெட்டிகளுடன் ரூ. 3.25 லட்சம் மதிப்பில் 29 மூட்டைகளில் 456 கிலோ குட்கா பதுக்கி கொண்டுவரப்பட்டது. இது தொடா்பாக நாமக்கல் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சம்பந்தப்பட்ட லாரியை மடக்கி சோதனையிட்டதில் குட்கா பதுக்கி கொண்டுவருவது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநரான திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பட்டி பெரியகம்பியம் பட்டு பகுதியைச் சோ்ந்த சக்தியை (28) போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments