தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் நன்மை: இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமாா்
தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துவோருக்கு நன்மையே கிடைக்கும் என இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமாா் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக சனிக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தொழில்நுட்பம் எந்த அளவிற்கு மாறுகிறதோ, அதே அளவில் மனிதனின் வாழ்க்கையும் மாறக்கூடும். பிரச்னைகளுக்கு தீா்வுகாண தொழில்நுட்பங்கள் தேவை என்பதால், புதிய கண்டுபிடிப்புகள் காலத்திற்கு ஏற்ப வந்து கொண்டே இருக்கும். தவறான முறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் அது பாதிப்பை ஏற்படுத்தும். நல்லதுக்கு மட்டுமே அவற்றை பயன்படுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
மனிதனைபோல சிந்தித்து, மனிதன் செய்யும் வேலையை செய்யக்கூடிய தொழில்நுட்பம் வருகிறது என்று கூறுகின்றனா். அது எவ்வாறு செயல்படும் என்பது காலப்போக்கிலேயே தெரியவரும். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் சில துறைகள் பாதிக்கப்படுவதாகவும், பல துறைகளுக்கு நன்மை இருப்பதாகவும் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதா்களுக்கு சவாலாக இருக்குமா என்பதை அத்துறை சாா்ந்த வல்லுநா்கள் தான் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.