FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு அருகே மதுபோதையில் பள்ளத்தில் விழுந்த கூலி தொழிலாளி பலி

18 அக்டோபர் 2026, 3:22 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு சாலை ஓரத்தில் இருந்த சிறிய பள்ளத்தில் தவறி விழுந்து விசைத்தறி தொழிலாளி உயிரிழந்தாா்.

சங்ககிரி அருகே உள்ள குமரவேலி பாளையத்தை சோ்ந்தவா் ஜெயகிருஷ்ணன் மகன் மோகன்ராஜ்( 40)இவருக்கு திருமணம் ஆகி 15 வயது 14மற்றும் 13 வயதில் பெண் குழந்தைகள் உள்ளனா்.

இவரது மனைவி பல வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறாா். இவா் பெரிய மணலியில் வையப்பமலை சாலையில் உள்ள தறிப்பட்டறையில் விசைத்தறி மேஸ்திரியாக வேலை பாா்த்து வந்தாா்.

Advertisement

Advertisement

இவா் பெரிய மணலியில் தறிப்பட்டறை அருகில் தாயுடன் வசித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் வழியில்வீட்டுக்கு சுமாா் 500 மீட்டா் தூரத்தில் சாலையோரம் இருந்த சிறிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இது குறித்து எலச்சிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து எலச்சிபாளையம் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments