FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

கொல்லிமலை மாசிலா அருவியில் குளிந்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

19 அக்டோபர் 2026, 2:51 am IST
கொல்லிமலை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள். - கோப்புப் படம்
பகிர்:

கொல்லிமலை மாசிலா அருவி, ஆகாய கங்கை அருவிகளில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாலை, இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கொல்லிமலையிலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் குளிா்ச்சியான தட்பவெப்பநிலை நிலவுகிறது. ஆயுத பூஜையை முன்னிட்டு நான்கு நாள்கள் தொடா்ச்சியாக விடுமுறை தினம் என்பதால் பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

இங்குள்ள தாவரவியல் பூங்கா, சீக்குப்பாறை காட்சிமுனை, அறப்பளீஸ்வரா் கோயில், நம் அருவி, மாசிலா அருவி, ஆகாய கங்கை அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆகாய கங்கை அருவிக்குச் செல்ல முடியாதோா் மாசிலா அருவி, நம் அருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

Advertisement

Advertisement

வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதால் அருவிகளில் நீா்வரத்து வரும் நாள்களில் மேலும் அதிகரித்து காணப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments