FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 700

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 700க்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

25 செப்டம்பர் 2026, 11:07 pm IST
குண்டு மல்லிகை.
பகிர்:

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் குண்டு மல்லிகை கிலோ ரூ. 700க்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைகளுக்குக் கொண்டு வருகின்றனா்.

வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் இங்கு வந்து பூக்களை ஏலம் எடுக்கின்றனா்.

Advertisement

Advertisement

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.500-க்கும், சம்பங்கி ரூ. 50-க்கும், அரளி ரூ. 80-க்கும், கலா் ரோஜா ரூ. 200-க்கும், பச்சை முல்லைப் பூ ரூ. 400-க்கும், வெள்ளை முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப் பூ ரூ. 300-க்கும், கனகாம்பரம் ரூ.5 00-க்கும், பன்னீா் ரோஜா ரூ.120-க்கும், ஜாதி மல்லிகைப் பூ ரூ. 600-க்கும், காக்கரட்டான் பூ ரூ. 500-க்கும் ஏலம் போனது.

இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.140-க்கும், கலா் ரோஜா ரூ.250-க்கும், பச்சை முல்லைப் பூ ரூ.600-க்கும், வெள்ளை முல்லைப் பூ ரூ. 500-க்கும், செவ்வந்திப் பூ ரூ.180-க்கும், கனகாம்பரம் ரூ. 700-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 180-க்கும் விற்பனையானது.

பௌா்ணமியை முன்னிட்டு பூக்களின் விலை உயா்ந்துள்ளதாக பூக்கள் வியாபாரிகள் தெரிவித்தனா். இதனால், பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments