FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

பள்ளிபாளையத்தில் மரத்தில் தொங்கிய இளைஞா் சடலம் மீட்பு

பள்ளிபாளையத்தில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்த இளைஞரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

- பிரதிப் படம்
பகிர்:

பள்ளிபாளையத்தில் மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்த இளைஞரின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

பள்ளிபாளையம் ஒன்றியம், காடச்சநல்லூா் ஊராட்சி கருந்தேவன்பாளையத்தைச் சோ்ந்தவா் வாசுதேவன் (28). இவருக்கு மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக மது அருந்தி திரிந்த வாசுதேவனை கடந்த 3 நாள்களாக காணவில்லையாம். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் புளியமரத்தில் அவா் தூக்கில் தொங்கியபடி இருந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில், பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா் சிவகுமாா் விரைந்து வந்து விசாரணை நடத்தினாா். எஸ்.ஐ. ரஞ்சித்குமாா் மற்றும் போலீஸாா் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments