FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆஞ்சநேயர், சென்னகேசவப் பெருமாள் கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா?

சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது சிதிலமடைந்துள்ள அருள்மிகு ஆஞ்சநேயர், அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில்களைச் செப்பனிட்டு கும்பாபிஷேகம் நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி மலை மீது சிதிலமடைந்துள்ள அருள்மிகு ஆஞ்சநேயர், அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில்களைச் செப்பனிட்டு கும்பாபிஷேகம் நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்ககிரி மலையானது சுமார் 1500 அடி உயரம் கொண்டது. மலை உச்சிக்குச் செல்ல 10 நுழைவு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலிலும் பல்வேறு கலை அம்சங்களுடன் கூடிய படங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. பத்தாவது வாசலுக்கு அடுத்தாற் போல் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி கோயிலும் அதனையடுத்து அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலும் உள்ளன.

இந்தக் கோயில்கள் கி.பி.13-ஆம் நூற்றாண்டின் ஹொய்சாளர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அவருக்குப் பின்னால் வந்த அரசர்களும் ஆங்கிலேயர்களும் கோட்டைகளைச் செப்பனிட்டு பராமரித்தனர்.

Advertisement

Advertisement

தற்போது அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி கோயில் மேற்புறம் முழுவதும் சிதிலமடைந்து காணப்படுவதால் சூரிய ஒளி நேராக சுவாமி மீது படுகிறது. இக்கோயில் சிதலமடைந்துள்ளதால் அர்ச்சகர்கள் சுவாமிக்கு பூஜை செய்வதைத் தவிர்த்து வருகின்றனர்.

அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுடன் நின்ற கோலத்தில் உள்ளார். வெளிப்பகுதியில் வலப்புறத்தில் ஆண்டாளும் இடப்புறத்தில் தாயார் சுவாமிகளும் உள்ளன. ஆழ்வார்கள், துவாரபாலகர்கள் சிலைகளும் உள்ளன. கோயிலின் பிரகாரத்திற்கு வெளியே திருக்கோடி ஏற்றுவதற்கான விளக்குத்தூண் உள்ளது. இக்கோயிலின் கோபுரம் சிதலமடைந்துள்ளது.

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும், ஆவணி மாத கடைசி சனிக்கிழமை, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சங்ககிரி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனர்.

சங்ககிரி மலைக்கோட்டையானது தொல்பொருள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில்களில் தற்போது ஒவ்வொரு பகுதியாக சிதிலமடைந்து வருகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களைப் பாதுகாக்கும் பொருட்டு இரு கோயில்களையும் செப்பனிட்டு, கும்பாபிஷேகம் நடத்த மத்திய, மாநில அரசுகள் உதவியுடன் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments