குஞ்சாண்டியூரில் போக்குவரத்து நெரிசல்
மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரில் நெரிசல் நேரத்தில் போலீஸார் போக்குவரத்தைச் சீர் செய்யாததால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரில் நெரிசல் நேரத்தில் போலீஸார் போக்குவரத்தைச் சீர் செய்யாததால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் வழியாக சேலம், தாரமங்கலம், தருமபுரி, பெங்களூரு, மேட்டூர், கோவை, மைசூர், மாதேஸ்வரன்மலை போன்ற பகுதிகளுக்குச் சென்றாக வேண்டும். பேருந்துகளும் சுற்றுலா வாகனங்களும் சரக்கு வாகனங்களும் வந்து செல்லும் முக்கிய சந்திப்பு இது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி வாகனங்களும் வருவதால் அந்த நேரங்களில் நெரிசல் மிகுந்து காணப்படும். நெரிசல் நேரத்தில் போலீஸார் இப்பகுதியில் போக்குவரத்தைச் சீர் செய்வது வழக்கம்.
Advertisement
Advertisement
தற்போது போலீஸார் பற்றாக்குறையைக் காரணம் கூறிப் போக்குவரத்தைச் சீர் செய்ய வருவதில்லை. அதனால் திங்கள்கிழமை சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தாமதமாக வந்து போலீஸார் போக்குவரத்தைச் சீர் செய்தனர்.
போக்குவரத்து ஸ்தம்பித்ததால் மேட்டூர், சேலம், தாரமங்கலம் சாலை சந்திப்பில் சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் சாலையில் நின்றன. இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவியரும் பணிக்குச் சென்று திரும்பிய தொழிலாளர்களும் கடும் அவதிக்குள்ளானார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.