FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு அளிக்க வந்த பெண்கள்

சேலம் மாவட்டம் சிக்கனம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள் சீரான குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர்.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

சேலம் மாவட்டம் சிக்கனம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள் சீரான குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர்.

இதுகுறித்து சிக்கனம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சின்னநடுப்பட்டி, தும்பிப்பாடி, குதிரைகுத்திபள்ளம் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

மேற்கண்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களது பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 15 நாள்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. அதுவும் சிறிதளவே வருவதால், எங்களுக்கு போதவில்லை. இதனால் நாங்கள் 25 லிட்டர் கேனை விலை கொடுத்து வாங்கி உபயோகிக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அன்றாட உபயோகத்துக்காக 1,000 லிட்டர் தண்ணீரையும் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறோம். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கழிவுநீர் கால்வாய் வசதி வேண்டி...

பாஜக மாநிலத் துணைத் தலைவர் சிவகாமி பரமசிவம் தலைமையில் பாஜகவினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் திருநகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைத்து வரிகளையும் செலுத்திய பிறகும், கடந்த 25 ஆண்டுகளாக கழிவுநீர்க் கால்வாய் வசதி செய்து தரப்படாததால் இவர்கள் கழிவுநீரை வீட்டுக்கு அருகில் குழி வெட்டி ஆண்டுக் கணக்கில் தேக்கி வைக்கின்றனர். இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments