FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவர் கைது

சேலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூவரை போலீஸார் சனிக்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

சேலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூவரை போலீஸார் சனிக்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சேலம் உடையாப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் நித்தியானந்தம் (32), அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அம்பேத்கர் (24) ஆகியோர் கருப்புசாமி என்பவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.1,500 -ஐ பறித்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அம்மாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அம்பேத்கர் மீது வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 வழக்குகளும், நித்தியானந்தம் மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளன.

Advertisement

Advertisement

தாதகாப்பட்டி கொச தெருவைச் சேர்ந்த சேகர் மகன் வெட்டுவா சங்கர் என்கிற சங்கர் (25), இவரது கூட்டாளி கேசவன் என்பவரும் சேர்ந்து கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி பனமரத்துப்பட்டியில் காவலராகப் பணிபுரியும் சிவப்பிரகாசத்திடம் வாய்த்தகராறு செய்து கல்லால் தாக்கி, காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சங்கர் மீது பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் இரு வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

நித்தியானந்தம், அம்பேத்கர், வெட்டுவா சங்கர் ஆகிய மூவரும் பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அந்தந்தக் காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் பரிந்துரையின் பேரில் மாநகரக் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் பரிசீலனை செய்து, அவர்கள் மூவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய சனிக்கிழமை ஆணைப் பிறப்பித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments