FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திமுக நிர்வாகிகள் கவனம் செலுத்த வேண்டும்

திமுக நிர்வாகிகள் வரைவு வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்த வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

திமுக நிர்வாகிகள் வரைவு வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்த வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலத்தில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளர் கோபால் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட, ஒன்றிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாள், 17-ஆம் தேதி தந்தை பெரியார் பிறந்தநாள், திமுக உருவான நாள் கொண்டாடப்படுவதால், கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

சேலம் கிழக்கு மாவட்டத்துக்குள்பட்ட கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியலை சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும், வாக்குச் சாவடி முகவர்களும் வாக்குச்சாவடிகள் வாரியாக கவனமாகப் பார்க்க வேண்டும். அதில் காணப்படும் குறைகளை உடனடியாக வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு அலுவலரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். வாக்காளர் வரைவுப் பட்டியலில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி, அக்டோபர் 4-ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments