திருட்டு வழக்கில் தொடர்பு:ஆத்தூர் அருகே மூவர் கைது
ஆத்தூர் அருகே வீடுகளில் தங்க நகைகளை திருடிச் சென்றதாக மூவரை மல்லியகரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆத்தூர் அருகே வீடுகளில் தங்க நகைகளை திருடிச் சென்றதாக மூவரை மல்லியகரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆத்தூரை அடுத்த ஈச்சம்பட்டி, நாவலூர், வேப்பம்பூண்டி, நாவலூர் ஆகிய கிராமங்களில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடர்கள் திருடிச் சென்றனர்.
ஈச்சம்பட்டி துரைசாமி (50) என்பவரது வீட்டில் கடந்த 10.7.2015 அன்று பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
Advertisement
Advertisement
அதேபோல வேப்பம்பூண்டியில் 16.4.2015 அன்று ஜெகதாம்பாள் என்பவரது வீட்டில் 6 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. 20.5.2015 அன்று நடுவலூர் அண்ணாமலை (45)என்பவரது வீட்டில் நான்கரை பவுன் தங்க நகைகள் திருட்டுப் போனது. நடுவலூர் கண்ணன் என்பவரது வீட்டில் திருட்டு முயற்சி நடைபெற்றது. இதுகுறித்து ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் எம்.காசிநாதன் தலைமையில் தனிப்படை போலீலார், மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை தம்மம்பட்டி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் மூவரைப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் தம்மம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன்(22), சிவா (23), விழுப்புரம் மாவட்டம், கச்சிராப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி (28) என்பதும், அவர்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீஸார், ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.