FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முனியப்பன் கோயில் கும்பாபிஷேகம்

மேட்டூர் அருகே உள்ள மங்கானூர் கோட்டை முனியப்பன் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

மேட்டூர் அருகே உள்ள மங்கானூர் கோட்டை முனியப்பன் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக வியாழக்கிழமை காலை திப்பம்பட்டி காவிரி ஆற்றிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் புனிதநீர் எடுத்து வந்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் விநாயகர் பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து பூஜை, யாக பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.

இதைத்தொடரந்து, வெள்ளிக்கிழமை மங்கள இசை, விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை நடைபெற்று கோட்டை முனியப்பன் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில், மங்கானூர், ஆண்டிக்கரை மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments