ஓமலூரில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்
சேலம் மேற்கு மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஓமலூரில் நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஓமலூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஓமலூர் ஒன்றியச் செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். நகரச் செயலாளர்கள் ஓமலூர் வெங்கடேஸ்வரன், கருப்பூர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர்அணை உபரிநீர் சரபங்கா நதி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இந்தத் திட்டத்தை காடையாம்பட்டியில் சரபங்கா ஆறு, சேலம் திருமணிமுத்தாற்றில் இணைத்து, ஆத்தூர் வசிஷ்ட நதியில் சேர்த்தால் சேலம், நாமக்கல் மாவட்டங்கள் முழுமையாக பயனடையும், எட்டுவழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் சீராக கோயில்களில் பூஜைகள் செய்வது, திருப்பூரில் நடைபெறும் மாநாட்டில் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் ஓமலூர், கருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டு மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்து பேசினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.