வீடுகள்தோறும் அரசு மானியத்தில் மாடித் தோட்டம்: தோட்டக்கலைத்துறை அழைப்பு
அரசு மானியத்தில் வீடுகள்தோறும் இயற்கை முறையில் காய்கறிகள் உற்பத்தி செய்யும் மாடித் தோட்டம் அமைத்துக் கொள்ள தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
அரசு மானியத்தில் வீடுகள்தோறும் இயற்கை முறையில் காய்கறிகள் உற்பத்தி செய்யும் மாடித் தோட்டம் அமைத்துக் கொள்ள தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து வாழப்பாடி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் மீனாட்சி சுந்தரம், தோட்டக்கலை அலுவலர் நித்யா, உதவி அலுவலர்கள் கா.விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-
வீடுகளில் அன்றாட உணவுக்குத் தேவையான காய்கறிகளை ராசயனங்கள் இன்றி இயற்கை முறையில் அவரவர் வீடுகளிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நோக்கில், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அரசு மான்யத்தில் மாடித்தோட்டங்கள் அமைத்து கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வெண்டை, கத்திரி, பாகற்காய், மிளகாய், கொத்தமல்லி, அவரை, முள்ளங்கி, தக்காளி, அரைக்கீரை ஆகியவற்றின் தரமான விதைகள் வழங்கப்படுகிறது. அசோஸ்பைரில்லம், பாஸ்மோபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனாஸ், அசாடிராக்டின், உயிர் உரங்களும், செடி வளர்ப்புக்கு தேவையான தேங்காய் நார் கழிவுடன் கூடிய பாலீத்தின் பாக்கெட்டுகள், 18:18:18 நீரில் கரையும் உரம், மாடித்தோட்டம் அமைக்கும் முறை குறித்த விளக்கக் கையேடு ஆகியவை கொண்ட ரூ.522 மதிப்புள்ள பெட்டகம், அரசு மானியத்தில் ரூ.322க்கு வழங்கப்படுகிறது.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில், தங்களது அடையாள ஆவண நகலோடு விண்ணப்பித்து மாடித்தோட்ட பெட்டகத்தை பெற்று, வீட்டு மாடியில் காய்கறி தோட்டத்தை அமைத்து பயன் பெறலாம்.
கூடுதல் தகவல்களுக்கு 9940448764 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர்கள் கூறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.