பெரியார் பல்கலை.யில் முறையற்ற பணி நியமனம்: விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்தல்
பெரியார் பல்கலைக்கழகத்தில் முறையற்ற பணி நியமனம் குறித்து ஆளுநர் விசாரணை கமிஷன் அமைத்திட வேண்டும்
பெரியார் பல்கலைக்கழகத்தில் முறையற்ற பணி நியமனம் குறித்து ஆளுநர் விசாரணை கமிஷன் அமைத்திட வேண்டும் என தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனங்களில் பல்வேறு முறைகேடுகளும், தகுதியற்றவர்கள் போலி சான்றிதழ் மற்றும் போலி அனுபவச் சான்றிதழ் அளித்து பணி நியமனம் பெற்றவர்கள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முன்னாள் பதிவாளர் கே. அங்கமுத்து தற்கொலை செய்து ஓராண்டு ஆகிறது. அவர் தனது தற்கொலை கடிதத்தில் பல்கலைக்கழக முறைகேடுகள் குறித்து குறிப்பிட்டுள்ளவர்கள் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அவர்களை பாதுகாப்பதற்கு கருவியாக அமைந்துவிடும். எனவே, பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் உடனடியாக விசாரணை கமிஷன் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம், திருவள்ளுவர் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து மாபெரும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் பசுபதி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.