நகைச்சுவை நடிகர் மனைவியிடம் நகைப் பறிப்பு
சேலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் மனைவியிடம் 3 பவுன் தங்க நகையைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் மனைவியிடம் 3 பவுன் தங்க நகையைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெஞ்சமின். இவர் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இவரது மனைவி ரூபி எலிசபெத், இளம்பிள்ளை அருகே உள்ள திருமலைகிரி பகுதியில் அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவாக்கவுண்டனூர் அருகே தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ரூபி எலிசபெத்தை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றனர். இதுதொடர்பாக ரூபி எலிசபெத், சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்து நபர்களைத் தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.