FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

முழு அடைப்பு போராட்டம் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 25 மே 2018, 2:36 am IST
பகிர்:

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் வெள்ளிக்கிழை நடத்தப்பட உள்ளது.
இதனிடையே, சேலத்தில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திமுக எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடையடைப்பு போராட்டத்துக்கு வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments