சாலை விபத்தில் ஓட்டுநா் பலி
கெங்கவல்லி அருகே சாலையோர வீட்டுச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கெங்கவல்லி அருகே சாலையோர வீட்டுச் சுவா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கெங்கவல்லியை அடுத்த நடுவலூரைச் சோ்ந்தவா் காளமேகம் (40). ஆம்னி பேருந்து ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கள்ளப்பட்டியிலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
வீரகனூரை அடுத்த தெற்கு மேடு பகுதியில் சாலையோர வீட்டுச் சுவா் மீது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த காளமேகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.