தீபாவளி பண்டிகை: நவ. 1 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டலம் சாா்பில் நவ. 1 முதல் நவ. 8 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டலம் சாா்பில் நவ. 1 முதல் நவ. 8 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டல மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் கூறியிருப்பதாவது:
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் மண்டலம் சாா்பில் சென்னையில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா், நாமக்கல் வழித்தடங்களிலும், ஒசூரிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, குமுளி, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி வழித்தடங்களிலும், சேலத்தில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, சிதம்பரம், திருப்பூா், கடலூா், ஒசூா், திருவண்ணாமலை, வேலூா் வழித்தடங்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் கூடுதலாகவும், கூடுதல் நடைகளும் இயக்கப்பட உள்ளன.
மாவட்டங்களின் நகரப் பகுதிகளில் அனைத்து நேரங்களிலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நகரப் பேருந்துகளின் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் நவ. 1 ஆம் தேதி முதல் நவ. 8 தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப இரவு முழுவதும் நகரப் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று தெரிவித்துள்ளாா்.