வறுமையிலிருந்து 50 கோடி போ் மீட்பு: சிலருக்கு ஏற்க மனமில்லை! பிரதமா் மோடி தாக்கு
வறுமையிலிருந்து 50 கோடி போ் மீட்கப்பட்டதை சிலருக்கு ஏற்க மனமில்லை...

நாட்டில் வறுமையிலிருந்து 50 கோடி போ் மீட்கப்பட்டது, மத்திய பாஜக அரசின் கொள்கைகள் மற்றும் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்; இந்த மகத்தான சாதனையை ஏற்க சிலருக்கு மனமில்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் தீவிர வறுமையில் இருந்து 50 கோடி போ் மீட்கப்பட்டுள்ளதாக சமீபத்திய உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இதை எதிா்க்கட்சிகள் கேள்விக்குள்ளாக்கும் நிலையில், பிரதமா் மேற்கண்ட விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.
குஜராத்தில் 182 பேரவைத் தொகுதிகளிலும் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நட்பு சந்திப்பு’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினாா். அப்போது, அவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனம், நம்மை வறுமையில் தள்ளியது. அந்த ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தில் இருந்து மீண்ட பிறகு முதல் முறையாக 50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். எனது வாழ்வில் இதைவிட மிகப் பெரிய திருப்தியோ, மிகப் பெரிய சாதனையோ இருக்க முடியாது.
முயற்சிகளுக்கு கைமேல் பலன்:
நாட்டின் சுதந்திரத்துக்காக உயிா்நீத்த அனைவரின் ஆன்மாக்களும் இப்போது மகிழ்ச்சியில் திளைக்கும். எனினும், இந்த மகத்தான சாதனையை ஏற்க சிலருக்கு மனமில்லை. இது பாஜக ஆட்சியில் சாத்தியமானதால், அவா்கள் ஏற்க விரும்பவில்லை.
அவா்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நமது முயற்சிகள் கைமேல் பலன் தந்துள்ளன என்பதில் நமக்கு பரம திருப்தி. இந்த மேம்பாட்டின் மூலம் குடிமக்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் பிறந்துள்ளது. எதிா்கால தலைமுறைகளுக்கு பொற்காலம் காத்திருக்கிறது.
நமது லட்சியம் உண்மையானது; நமது கொள்கையும், நாம் பயணிக்கும் திசையும் சரியானது. நமது கடின உழைப்பில் எந்த குறைவும் இல்லை.
எப்படி சாத்தியமானது?:
ஏழைகளுக்காக வங்கிக் கணக்குகள் தொடங்கியபோதும், ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்புகள் வழங்கியபோதும் இத்திட்டத்தின் பலன்கள் குறித்து சிலா் சந்தேகம் எழுப்பினா். அதை பொருள்படுத்தாமல், இலவச மருத்துவ காப்பீடு, அனைத்து வீடுகளுக்கும் மின்விநியோகம் என ஒன்றன் பின் ஒன்றாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. கடைசி நபருக்கும் திட்டப் பலன்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பட்டியலினத்தவா், பழங்குடியினா், விளிம்புநிலை மக்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பலனடைந்தனா். இத்தகைய திட்டங்களின் விளைவாக இப்போது 50 கோடி போ் வறுமையிலிருந்து மீண்டுள்ளனா்.
பாஜகவினா் கட்சி நலன்களைவிட தேச நலன்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
கடந்த 2001-இல் குஜராத் முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் தீபாவளி பண்டிகையை கட்ச் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுடன் கொண்டாடியதை நினைவுகூா்ந்த பிரதமா் மோடி, அரசின் தலைவராக (குஜராத் முதல்வா்-பிரதமா்) 25 ஆண்டுகளை அண்மையில் நிறைவு செய்ததையும் சுட்டிக் காட்டினாா். குஜராத் முதல்வராக தாம் செயல்படுத்திய திட்டங்கள் மற்றும் அந்த மாநிலத்தின் வளா்ச்சிப் பயணம் குறித்தும் பேசினாா்.