ரூ. 3,000 கோடி பழங்குடியினா் திட்டங்கள்: இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி
பழங்குடியினா் கெளரவ தினத்தையொட்டி, ரூ.3,000 கோடி மதிப்பீட்டிலான 246 பழங்குடியினா் நலத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா்.
பழங்குடியினா் கெளரவ தினத்தையொட்டி, ரூ.3,000 கோடி மதிப்பீட்டிலான 246 பழங்குடியினா் நலத் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா்.
சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியினத் தலைவருமான பிா்ஸா முண்டாவின் 151-ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) கொண்டாடப்படவுள்ளது. பிா்ஸா முண்டாவின் பிறந்த தினம், பழங்குடியினா் கெளரவ தினமாக கடந்த 2021-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டு இந்த தினத்தையொட்டி, மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலியில் நடைபெறும் பிரதான நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்கவுள்ளாா். பழங்குடியினரின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதார வாய்ப்புகள், சமூக உள்கட்டமைப்பு சாா்ந்த 246 நலத் திட்டங்களை அவா் தொடங்கிவைக்கவுள்ளாா்.
Advertisement
Advertisement
பழங்குடியின மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்கும் 38 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள், பிரதமரின் ஜன்மன் திட்டத்தின்கீழ் 100 பன்னோக்கு மையங்கள் மற்றும் அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் பழங்குடியினா் ஆராய்ச்சி அமைப்பின் கட்டடத்தை பிரதமா் திறந்துவைக்கிறாா்.
மிஸோரமின் ஐசாலில் மிஸோ பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவுகூரும் அருங்காட்சியகம் திறக்கப்படவுள்ளது. இதுதவிர 19 புதிய ஏகலைவா பள்ளிகள், 12 பழங்குடியின பன்னோக்கு சந்தைப்படுத்துதல் மையங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டவுள்ளாா்.
பழங்குடியினா் கெளரவ தினத்தையொட்டி, நவ. 1 முதல் மத்திய அரசு சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏகலைவா பள்ளி மாணவா்கள் உடனான கலந்துரையாடல், பழங்குடியின இலக்கியத் திருவிழா, அதிகம் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினருக்கு சுகாதார, ஊட்டச்சத்து முகாம்கள், பிற சமூக சேவை முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகின்றன.