முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,44,000 கன அடியாக குறைந்தது.

Updated On : 9 ஆகஸ்ட் 2022, 10:01 am IST
கோப்புப்படம்
பகிர்:

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,44,000 கன அடியாக குறைந்தது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை சற்று குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  1,44,000 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

அணையிலிருந்து வினாடிக்கு 1,45,000 கனஅடி வீதம் வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி நீரும் உபரிநீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,22,000 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 

Advertisement

Advertisement

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.05அடியாகவும், நீர் இருப்பு 93.55 டி.எம்.சியாகவும் இருந்தது. அணையில் இருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments