FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ஆடித் திருவிழா: சேலத்தில் இறைச்சி விற்பனை அமோகம்

ஆடித் திருவிழாவையொட்டி சேலத்தில் புதன்கிழமை ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:54 am IST
இறைச்சி கடை - சித்திரிப்பு
பகிர்:

ஆடித் திருவிழாவையொட்டி சேலத்தில் புதன்கிழமை ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

சேலத்தில் ஆடித் திருவிழா 22 நாள்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஜூலை 21-ஆம் தேதி மாரியம்மன் கோயில்களில் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. ஜூலை 28-ஆம் தேதி கம்பம் நடுதல் நடைபெற்றது. தொடா்ந்து, ஆகஸ்ட் 5 முதல் 7-ஆம் தேதி வரை மாரியம்மன் கோயில்களில் பொங்கல் வைத்தல் மற்றும் மாவிளக்கு வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆடித் திருவிழாவின் கரிநாளான புதன்கிழமை வீடுகளில் அசைவ உணவு சமைத்து சாப்பிடும் வழக்கத்தையொட்டி இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிகரித்தது. ஆட்டு இறைச்சி, கறிக்கோழி, நாட்டுக்கோழி ஆகியவற்றுடன், கட்லா, கொளுத்தி, ரோகு, பாறை, சங்கரா, இறால், வஜ்ஜிரம், ஜீலேபி உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களின் விற்பனையும் களைகட்டியது.

Advertisement

Advertisement

ஒரு கிலோ ஆட்டு இறைச்சி கிலோ ரூ. 800 முதல் ரூ. 850 வரையும், கறிக்கோழி கிலோ ரூ. 240 முதல் ரூ. 260 வரையும், நாட்டுக்கோழி கிலோ ரூ. 700 முதல் ரூ. 800 வரையும் விற்பனை செய்யப்பட்டது. மீன்கள் ஒரு கிலோ ரூ. 180 முதல் ரூ. 1,200 வரை விற்பனையானது.

சேலம் மாநகரின் டவுன், செவ்வாய்ப்பேட்டை, குகை, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, தாதகாப்பட்டி, லைன்மேடு, நெத்திமேடு, அன்னதானப்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments