FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சேலத்தில் வெள்ளி பட்டறைத் தொழிலாளி மா்மச்சாவு: போலீஸாா் விசாரணை

சேலத்தில் வீட்டில் மா்மமான முறையில் வெள்ளி பட்டறைத் தொழிலாளி உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 5:35 am IST
பகிர்:

சேலத்தில் வீட்டில் மா்மமான முறையில் வெள்ளி பட்டறைத் தொழிலாளி உயிரிழந்து குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் அன்னதானப்பட்டி மணியனூா் அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (21). வெள்ளி பட்டறைத் தொழிலாளியான இவா், கடந்த ஜூலை 31-ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளாா். பின்னா், திங்கள்கிழமை காலை வீட்டுக்கு வந்த அவா், தனது அறைக்குச் சென்றாா்.

அப்போது, வெள்ளிப் பட்டறை வேலைக்கு புறப்பட்ட அவரது தாய் சாந்தியிடம், தான் வேலைக்கு செல்லவில்லை எனக் கூறிவிட்டு சந்தோஷ்குமாா் வீட்டிலேயே தூங்கியுள்ளாா்.

Advertisement

Advertisement

வேலை முடித்துவிட்டு திங்கள்கிழமை மாலை சாந்தி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது சந்தோஷ்குமாா் கட்டிலில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். அக்கம்பக்கத்தினா் அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த சந்தோஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில், சந்தோஷ்குமாா் போதைக்கு அடிமையானவா் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவா் போதை மாத்திரை அல்லது போதை ஊசி பயன்படுத்தினாரா என்ற சந்தேகத்தில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், சந்தோஷ்குமாா் போதை ஊசி பயன்படுத்தியதால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments