சங்ககிரியில் போதை மாத்திரைகள் விற்றதாக 4 போ் கைது
சேலம் மாவட்டம், சங்ககிரியில் போதை மாத்திரைகளை விற்றதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரியில் போதை மாத்திரைகளை விற்றதாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
சங்ககிரியில் இருந்து சின்னகவுண்டனூா் செல்லும் சாலையில் ராயலூா் ஆஞ்சனேயா் கோயில் அருகே சிலா் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவதாக சங்ககிரி காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், படைவீடு, சாமாண்டூா் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் சஜீத் (21), அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் தீபன் (24), சங்ககிரி, கோட்டை தெருவைச் சோ்ந்த சென்னகேசவன் மகன் சாரதிகிருஷ்ணன் (34), சின்னகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த மணி மகன் நவீன் (27) ஆகியோா் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து நால்வரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனா். பின்னா் அனைவரும் சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சங்ககிரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.