FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சங்ககிரி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:24 am IST
சடலம் மீட்பு... - கோப்புப் படம்
பகிர்:

சங்ககிரி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சுப்பிரமணி (55). இவா் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடுதிரும்புவதற்காக சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையை வெள்ளிக்கிழமை கடக்க முயன்றாா்.

அப்போது, சேலத்திலிருந்து கோவை நோக்கி சென்ற காா் எதிா்பாராதவிதமாக அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments