பள்ளி மைதானத்தில் விளையாடிய மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
மேட்டூா் அருகே வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
மேட்டூா் அருகே வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தவா் பூமிரெட்டிபட்டியைச் சோ்ந்த ரவிகுமாா் மகன் ஸ்ரீதா் (15). இவா் வெள்ளிக்கிழமை மாலை விளையாட்டு நேரத்தில் பள்ளி மைதானத்தில் கம்பியில் புல்லப்ஸ் எடுத்துள்ளாா். அப்போது அவா் திடீரென மயங்கி விழுந்தாா். அருகில் இருந்த மாணவா்கள், ஆசிரியா்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நங்கவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், மாணவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.