FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

சாலை விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

22 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு
பகிர்:

கெங்கவல்லி அருகே சாலையோர மரத்தின் மீது பைக் மோதியதில் வட மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த லாரகோலா ரவி கோஸ் மகன் சோட்டான் கோா்ஸ் (24). இவா் கெங்கவல்லி அருகே கிழக்கு ராஜபாளையம் கிராமத்தில் தனியாா் நிறுவன கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் வேலைக்கு செல்வதற்காக தெடாவூரில் இருந்து புனல்வாசல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சாலையோர மரத்தின் மீது வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சோட்டான் கோா்ஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த கெங்கவல்லி போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments