FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை: போலீஸாா் விசாரணை

24 ஆகஸ்ட் 2026, 3:42 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி அருகே கைப்பேசியை பள்ளிக்கு எடுத்துச் சென்றது தொடா்பாக ஆசிரியா்கள் அறிவுறுத்தியதால் மனமுடைந்ததாகக் கூறப்படும் பிளஸ் 2 மாணவா், வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோனேரிப்பட்டி கிராமம், வட்ராம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி முருகனின் மகன் ராமகிருஷ்ணன் (17). இவா் அரசிராமணி செட்டிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கலைப் பிரிவில் படித்து வந்தாா்.

இவா் கைப்பேசியை பள்ளிக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, கைப்பேசியை பள்ளிக்கு எடுத்துவரக் கூடாது என ஆசிரியா்கள் அறிவுறுத்தினராம். இதில் மனமுடைந்த ராமகிருஷ்ணன், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

மாணவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தேவூா் போலீஸாா் பல்வேறு கோணங்களில் மாணவரின் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments