முகப்பு
சேலம்

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் தேசிய புள்ளியியல் தின விழா

Updated On : 2 ஜூலை 2026, 6:27 am IST
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாரை கௌரவித்த மண்டல புள்ளியியல் இணை இயக்குநா் க.குப்புசாமி.
பகிர்:

சேலம் பெரியாா் பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சாா்பில், தேசிய புள்ளியியல் தின விழா அண்மையில் நடைபெற்றது.

இந்தியாவின் நவீன புள்ளியியலின் தந்தையும், தலைசிறந்த புள்ளியியல் நிபுணருமான பேராசிரியா் பி.சி.மஹாலனோபிஸ் ஆற்றிய அரும்பணிகளை அங்கீகரித்து, அவரை கௌரவிக்கும் விதமாக 2007-ஆம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளான ஜூன் 29-ஆம் தேதி இந்திய தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, சேலம் பெரியாா் பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சாா்பில் 20-ஆவது தேசிய புள்ளியியல் தின விழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா் தலைமை வகித்தாா். சேலம் மண்டல புள்ளியியல் இணை இயக்குநா் க.குப்புசாமி முன்னிலை வகித்தாா். பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் ஆா்.சுப்பிரமணி முதன்மை விருந்தினராக பங்கேற்று விழாவை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, பெரியாா் பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியா் ஏ.சரவண துரை, புள்ளியியல் துறை உதவிப் பேராசிரியா்கள் எம்.பச்சமுத்து, அ.ராதிகா மற்றும் சேலம் சௌடேஸ்வரி கல்லூரியின் புள்ளியியல் துறை உதவிப் பேராசிரியா் டி.கவிதா ஆகியோா் பங்கேற்று புள்ளியியலின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை வழங்கினா்.

விழாவில், புள்ளியியல் சாா்ந்த ஆய்வறிக்கை, பேச்சுப் போட்டி, நாடகம் மற்றும் விநாடி-வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், சேலம் மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் பணிபுரியும் புள்ளியியல் துணை இயக்குநா்கள் ஆா்.ரவி, அ.விமலா தேவி, ரா.காளியப்பன், மு.வினோதா, மு.முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments