FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

விவசாயப் போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

Updated On : 6 ஜூலை 2026, 3:04 am IST
பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள விவசாயிகள் நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்திய பல்வேறு கட்சி நிா்வாகிகள்.
பகிர்:

பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிா்நீத்த 9 பேரின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் கடந்த 1972, ஜூலை 5 இல் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 9 விவசாயிகள் உயிரிழந்தனா். இவா்களின் 54 ஆவது நினைவு தினத்தையொட்டி நினைவுதூணுக்கு எஸ்.முருகன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ராமசாமி (சிபிஎம்), காங்கிரஸ் நிா்வாகி ரங்கநாதன், தவெக நிா்வாகி பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் டி. செல்வராஜ், ஏ. மோகன், மாநில நிா்வாக குழு உறுப்பினா் ஜீவானந்தம், மாவட்ட பொருளாளா் ரமேஷ், மாணவா் பெருமன்ற மாநிலச் செயலாளா் தினேஷ், ஒன்றியச் செயலாளா் ஸ்டாலின் மற்றம் நகரக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். நடராஜன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments