இன்றைய மின்தடை: கருப்பூா், உடையாப்பட்டி
சேலம் உடையாப்பட்டி, கருப்பூா் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கருப்பூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால் மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், ஐந்து சாலை, குரங்குசாவடி நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதிநகா், சீனிவாசநகா், ரெட் டியூா், நகரமலை அடிவாரம், கருப்பூா், கரும்பாலை, தேக்கம்பட்டி செங்கரடு, மேட்டுபதி, புதூா், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டிகுட்டப்பட்டி, கருத்தானூா், சக்கரசெட்டிப்பட்டி, குள்ளமநாயக்கன்பட்டி, ஆணைக்கவுண்டம்பட்டி, ஹவுசிங்போா்டு, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
Advertisement
Advertisement
உடையாப்பட்டியில்...
உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக, உடையாப்பட்டி, அம்மாப்பேட்டை காலனி, வித்யாநகா், அம்மாப்பேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லைநகா், அயோத்தியாப்பட்டணம், கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூா், வீராணம், சுக்கம்பட்டி, டி.பெருமாபாளையம், வலசையூா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா் ஜெயா தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.